அனர்த்த முகாமைத்துவ நிலையம்
Top
அனர்த்தத்தினால் பலி யானோர் எண்ணிக்கை 465 ஆக அதிகரிப்பு; 31,000 வீடுகளுக்கு சேதம்..!!
இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பாதிப்புகள் குறித்த சமீபத்திய அறிக்கை:
பாதிப்புக்குள்ளானோர்: 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர்
மோசமாகப் பாதிக்கப்பட்ட...
புதிய செய்திகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை; 485 குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 09 மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1757 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, இன்று காலை 09.00 மணி நிலவரப்படி, புத்தளம் மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
பல்வேறு அனர்த்த சம்பவங்களில் 08 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகள்
சீரற்ற வானிலை காரணமாக 187 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம், மன்னார், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் குறித்த மாவட்டங்களில் 177 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
அனர்த்த நிலைமைகளில் 24 மணி நேரமும் இயங்கும் துரித அழைப்பு இலக்கம்..!
எதிர்வரும் நாட்களில் பலத்த மழையினால் திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காகச் சகல மாவட்டங்களிலும் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகள் தொடர்பான விடயங்களை, 24 மணி நேரமும் இயங்கும் 117 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு மும்மொழிகளிலும் அறிவிக்க முடியும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி...
புதிய செய்திகள்
யாழ் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
<!--
-->
உள்நாட்டுச்செய்திகள்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பதவிக்கு புதியவர் நியமிப்பு..!
தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.
அதற்கமைய, 07ஆம் திகதி முதல் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த...
உள்நாட்டுச்செய்திகள்
அதிகரிக்கும் காட்டுத் தீ பரவல் – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு..!
நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காட்டுத்தீப்பரவல் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியன காவல்துறையினருடன் இணைந்து,...
புதிய செய்திகள்
கடும் மழையினால் 42 குடும்பங்கள் பாதிப்பு!
கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
22 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகள்
நுவரெலிய மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு!
மண்சரிவு அபாயம் காரணமாக ஹைபொரஸ்ட் பகுதியைச் சேர்ந்த 6 குடும்பங்கள் உட்பட்ட 36 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த 36 பேரும் ஹைபொர்ஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
சீரற்ற காலநிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு..!
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 320 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


