Monday, April 20, 2026
No menu items!

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

20 ஆண்டுகள் கடந்துள்ள ஆழிப்பேரலை-தேசிய பாதுகாப்பு தினம்..!

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது. இன்று அனுட்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்ச்சி...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 141, 268 குடும்பங்களைச் சேர்ந்த 475, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 101 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 2, 591 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 9, 934 குடும்பங்களைச் சேர்ந்த 32, 361 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள்...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழப்பு..!

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, நேற்று காரைதீவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்களே காணாமல் போயுள்ளனர். சம்பவத்தின் போது உழவு இயந்திரம் 11 பாடசாலை...

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்த அறிக்கை..!

சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள்...

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்..!

பதுளை மாவட்டத்தின்  நேற்று வெள்ளிக்கிழமை  (08) பெய்த  கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. அத்துடன்,  தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு பெருக்கெடுத்ததால் பதுளை நகரை அண்டிய விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள சுமார்  50 குடும்பங்கள்...

கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போரும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்ட மண்சரிவு...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்கள் பாதிப்பு!

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துக்களைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 8...

சீரற்ற காலநிலையால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 233 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img