மண்சரிவு அபாயம் காரணமாக ஹைபொரஸ்ட் பகுதியைச் சேர்ந்த 6 குடும்பங்கள் உட்பட்ட 36 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த 36 பேரும் ஹைபொர்ஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட பிரிவு தெரிவித்துள்ளது.








