கிளிநொச்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் (20.03.2025) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் நேற்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட வேளையில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, போதுசன ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் போராட்ட முன்னணி ஆகிய 10   கட்சிகளும் 3 சுயேட்சை குழுவும் போட்டியிடவுள்ள நிலையில் 3 கட்சிகளும் 2 சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சை குழுவும் போட்டியிட உள்ள நிலையில் ஒரு சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்ட நிலையில் 8 கட்சிகள் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் பூநகரி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இடம் பெற உள்ளது என மாவட்ட தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

[கிளிநொச்சி  நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here