Tuesday, April 21, 2026
No menu items!

இராஜகிரிய

கைது செய்யப்பட்ட இளைஞருக்கு வெலிக்கடை பொலிஸாரால் நடந்த கொடூர சம்பவம்!

வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதுளையைச் சேர்ந்த இந்த இளைஞன் ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், முதலாம்...

பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு…!

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி...

பொதுத் தேர்தலுக்கான நிதியை வழங்கிய ஜனாதிபதி!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா தேவையென தேர்தல் ஆணைக்குழு கோரிய தொகையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக இரண்டு சந்திப்புகள் நேற்று(29.09.2024) இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...

மைத்திரியின் மன்னிப்பு செல்லாது!

ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என குறித்த மன்னிப்பை இன்று (06.06.2024) ரத்து செய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு.!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img