Wednesday, November 11, 2026
No menu items!

இலங்கை

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி..!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். முன்னாள்...

யாழில் தனியார் காணியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்பு..!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும்...

சற்று முன்னர் கைதானார் ரணில் விக்ரமசிங்க..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்…!

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 77.43 மீட்டர் தூரம்...

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் அகில விராஜ் காரியவசம்..!!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு..!!

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கட்டாய கைரேகை மற்றும் கூடுதல் நேர வேலைநிறுத்தம் குறித்த முடிவை திரும்பப்...

இராணுவ முகாமுக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை...

தேர்த் திருவிழாவில் நகை திருடிய இளம் யுவதி கைது..!!

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத்...

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் – விண்ணப்பம் கோரல்….

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டும் மற்றும் தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப விண்ணப்பப் படிவம் தயாரிக்க வேண்டும். முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்...
- Advertisement -spot_img