Tuesday, June 23, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு!

இன்று இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை எண்ணும் இரண்டாவது நாள் ஆகும். அதன்படி, இன்று (25) மற்றும் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், காவல்துறை, ஆயுதப்படைகள், பள்ளிகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் உட்பட...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260...

அஞ்சல் மூல வாக்களிப்பில் அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பதற்கான தெரிவு முன்னதாக வழங்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் பதிவான சில...

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று நேற்றுத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றிருந்தது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. அதேநேரம், இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று நடத்தியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு...

கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரவெட்டி பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பானது நேற்றைய தினம் (20/04/2025) இடம்பெற்றிருந்திருந்தது. உடுப்பிட்டி மற்றும் அல்வாய் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கி உரையாற்றினார். இதன் போது உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (4/21/2025) இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (4/21/2025) முற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களும் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத்...

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு!

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டவும், பொது மக்களின் உணர்வுகளைக் கையாளவும் அரசாங்கம்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு விநியோகங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது – பெஃப்ரல்!

பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அரச சொத்துக்களை...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img