2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரவெட்டி பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பானது நேற்றைய தினம் (20/04/2025) இடம்பெற்றிருந்திருந்தது.

உடுப்பிட்டி மற்றும் அல்வாய் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கி உரையாற்றினார்.

இதன் போது உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.

இம்முறை நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரவெட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அனைத்து தொகுதிகளிலும் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்று கரவெட்டி பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதோடு தமது அரசியல் பயனத்தை ஸ்திரம்பட அமைத்துக்கொள்ள வாழ்த்துக்களையும் அமைச்சர் இதன் போது தெரிவித்துக்கொண்டார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here