எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று நேற்றுத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றிருந்தது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதேநேரம், இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று நடத்தியது.

இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுன, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்தது.

அதேநேரம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியொதுக்கம் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் சிலர், மஹரகம நகரில் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here