Monday, June 15, 2026
No menu items!

எதிர்க்கட்சி தலைவர்

நாட்டை மீட்டெடுக்க வீண் பேச்சுகளை விடுத்து செயல்களில் களமிறங்க வேண்டும் – சஜித்!

வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு, கட்சி பேதங்களையும், வீண் பேச்சுகளையும் விடுத்து அதற்கான செயல்களில் களமிறங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தறை - ஊராபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம், விழுந்துள்ள படுகுழியிலிருந்து மீள முடியும் என எதிர்க்கட்சித்...

எதிர்க்கட்சி தலைவர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் கைகோர்த்து முதலில் இந்த அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின்...

சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள மோடி..!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில்...

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று வியாழக்கிழமை கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறவுள்ளது. 'தொலைதூரம் காண்போம் : அணி திரள்வோம் : எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று மதியம் 1 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் பொதுச்...

ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ என நக்கல் செய்த வசந்த சமரசிங்க!

தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ தெரியாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாதீடு மீதான நிதி அமைச்சின் செலவு தலைப்பு தொடர்பில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் இது தொடர்பில் உரையாற்றினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஹர்ஷ டி...

நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்திற்கு வரையறை..!

27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தினுள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அது அவ்வாறே செயற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் நாடாளுமன்றத்தில் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி..!

வலுவூட்டப்பட்ட பெண்களால் நிறைந்த அழகான இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த உயரிய பொறுப்பிற்காக எந்த நேரத்திலும் தேவையான பங்களிப்பையும் உந்து சக்தியையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில், “ஒரு தாய், மனைவி,...

வெளிநாடு செல்ல தயாராகும் வைத்தியர்கள் – சஜித் எச்சரிக்கை..!

சுமார் 5000க்கும் அதிகளவான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வைத்திய சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து, வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (06/03/2025) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் வைத்தியர்கள் பணியாற்றுவதற்கான உகந்த சூழல் இல்லை எனக் கூறிய...

எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு சஜித் கோரிக்கை..!

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம், மதவச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (01/02/2025) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவிலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டிற்கு வர...

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய பிரார்த்திக்கும் சஜித்..!

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (21/02/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் மக்கள் நல நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாங்களும் ஆதரவளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “வளமான நாடு,...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img