Monday, November 9, 2026
No menu items!

எம்பிலிப்பிட்டிய

பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர் கைது!!

எம்பிலிப்பிட்டிய, கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். T-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ காட்டு சீருடையுடன் மேற்கு வடக்கு குற்றப்பிரிவினரால் பெக்கோ சமனின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பள்ளியில் பெண் ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம் -விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த பிரதமர்..!

எம்பிலிப்பிட்டியவில் உள்ள வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றின் ஆண் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி (NPP) மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார், இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்கக்...

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்- 35பேர் மருத்துவமனையில்..!

மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொரகொலயாய பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய, தொரகொலயாய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேக நபரிடமிருந்து 24,730...

எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img