Tuesday, June 9, 2026
No menu items!

ஏவுகணை

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: 20 சிறார்கள் உட்பட  34 பேர் உயிரிழப்பு !

காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சிறார்கள் அடங்குவதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினையே, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஏதிலிகள் தங்கியிருந்த முகாமுக்கான நீர் விநியோக பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிப்பு..!

ஜம்மு - காஷ்மீரில் ஆயுததாரிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக  இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஒபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக  நேற்று (8) இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதற்கு பதிலடியாக...

மத்திய யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல் – 18 பேர் பலி..!

மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த...

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது!

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வடக்கு யுக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யுக்ரைன் நடத்திய 8 ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு மாத்திரமே ரஷ்யத் தரப்பினரால்...

ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹெஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள மொசாட் தலைமையகத்தினை இலக்குவைத்தே ஹெஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலிய தலைநகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img