Monday, April 20, 2026
No menu items!

கடவுச்சீட்டு

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க அனுமதி..!

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்...

கடவுச்சீட்டு நெருக்கடி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

கடவுச்சீட்டு நெருக்கடி தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போதைய பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படலாம். தற்போது, ​​தினசரி 2,900 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன, இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக மீண்டும் வரிசை!

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் இருந்த நீண்ட வரிசைகள் கடந்த சில மாதங்களாக நின்றிருந்தாலும், தற்போது திணைக்களத்திற்கு அருகில் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளன. ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற நேற்று பிற்பகல் முதல் வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற...

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை !

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. மேலும், அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் கடவுச்சீட்டு பெற தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது என்றார். அந்த கவுன்ட்டருக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

கடவுச்சீட்டுகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் புதிய முறை..!

ஒரு நாளைக்கு 2,500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னர், ஒரு நாளைக்கு 1,100 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவசரமாக வெளிநாடு செல்ல இருப்பவர்கள், அத்தகைய சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு ஒரு தனி வழி திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

கடவுச்சீட்டு தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, புலம்பெயர் தொழிலாளர்களின் இடம்பெயர்வை முடக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேல் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கோரிக்கை வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கொரிய மொழி புலமைத் தேர்வில்...

கடவுச்சீட்டு வழங்குவதில் மீண்டும் நெருக்கடி..!

கடவுச்சீட்டு வழங்குவதில் உள்ள நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போது கிடைக்கக்கூடிய கடவுச்சீட்டுபிரதிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. எனவே, இந்தப் பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு, அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும்...

கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய நிகழ்நிலை முறை அறிமுகம்!

கடவுச்சீட்டைப் பெறுவதற்கான புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இது 06 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வருமென தெரிவித்துள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய, பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை ஒதுக்கிக்கொள்ள...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img