Friday, November 6, 2026
No menu items!

காலி

காலியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி!

 காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். சம்பவத்தில் ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் – ரணில் விக்கிரமசிங்க!!

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலியில் உள்ள பிரதேச மக்கள் முன்னிலையில் இன்று(26) தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் வசித்த காலி கபுஹெம்பலா இல்லத்திற்குச் சென்றதுடன், பிரதேசவாசிகளும் வீட்டைச் சுற்றி திரண்டிருந்தனர். ரணில் விக்கிரமசிங்க விக்டர் ஐவனின்...

மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்..!

மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் மீனவர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே...

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று பேருந்துகள் – பயணிகளின் நிலை கேள்விக்குறி..!

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (26/1/2025) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 20...

வர்த்தகர் கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கண்டி,வத்துகாமம் நகரில் அண்மையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் நான்கு வாள்கள் மற்றும் மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் வர்த்தகர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டுக்கு முன்பாக வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு..!

தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் ஏலவே ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (21.12.2024) காலை காலி நோக்கி வேனில்...

மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்ற காரின் சாரதி கைது..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி கழிவறைக்குச் சென்ற போது குறித்த நபர், காரை எடுத்துக்கொண்டு இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கரையோர ரயில் சேவையில் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து கல்கிஸ்ஸ நேக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காலியில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) - 7 ஆசனங்கள் 1. நலின் ஹேவகே - 274,707 2. ரத்ன கமகே - 113,719 3. நயனதாரா பிரேமதிலகே - 82,058 4. நிஷாந்த சமரவீர - 76,677 5. திலங்க ருக்மல் - 74,143 6. நிஷாந்த பெரேரா - 71,549 7....

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் பலி!

காலி, பெந்தோட்டை, ரஜமாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img