Friday, June 12, 2026
No menu items!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் வெளியிட்டமை தொடர்பில் CIDயில் முறைப்பாடு..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி...

தேசபந்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் – விசாரணை ஆரம்பம்..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (2) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பூஸ்ஸ சிறையில் உள்ள இரு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அந்த திணைக்களம், கோட்டை நீதவான் நிலுபுலி...

போலி விசாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது!

போலி போலந்து நாட்டு விசாவுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கட்டார் வழியாக போலந்துக்கு பயணிக்க முயன்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு...

இணைய பயணச் சீட்டு மோசடி தொடர்பில் சி.ஐ.டியின் அறிவிப்பு..!

ரயில்வே திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வழங்கப்படும் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (4/24/2025) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ​​இந்த...

சமூக ஊடகங்களில் பரவும் போலியான கடிதம் குறித்து பொலிஸார் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. “கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரையும்,...

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் CID முன்னிலையில்!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.    

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில் முன்னிலை..!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09/04/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

CIDயிலிருந்து வெளியேறிய நாமல்..!

இன்று (4/7/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

CID முன்னிலையில் நாமல் ராஜபக்ஷ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தார்.

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்க்கு CID அழைப்பு..!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம்...
- Advertisement -spot_img

Latest News

காலநிலை மாற்றம் குறித்து புதிய அறிவிப்பு

உலக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு காரணமான எல் நினோ நிலை தற்போது தொடங்கியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களத்தின்...
- Advertisement -spot_img