Monday, November 9, 2026
No menu items!

கைது

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது. மேலதிக...

ஒளிப்பாய்ச்சி மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடற்படையால் கைது..!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் அவர்களின் படகுகள், இயந்திரங்கள் என்பன இன்று (4/10/2025) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (4/10/2025) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில்...

பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன்...

சி.ஐ.டியினால் அசோக விக்ரமசிங்க கைது..!

கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடொன்றின் தொடர்பில் ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபையின் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை வரவேற்ற சாணக்கியன்..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து...

ஒரு தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளுடன் நேற்று (8/4/2025) அதிகாலை கடற்படையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 8 உரப்பைகளில் ஈரமான நிலையில் போதைப் பொருள் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைபொருள் மற்றும் சந்தேக நபர்...

சி.ஐ.டியினால் பிள்ளையான் கைது..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தெய்வேந்திரமுனை இரட்டைக் கொலை – இருவர் கைது..!

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள வீதியில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07/04/2025) கந்தர பொலிஸ் நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன் முன்னிலையான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச்...

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து 3 பேர் கைது..!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) அதிகாலை கைது செய்ததுடன் 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலையில்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img