முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.







