Wednesday, November 11, 2026
No menu items!

கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு!

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.    

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேகநபர்..!

வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2/24/2025) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொலை சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மித்தெனிய முக்கொலை – மற்றுமொருவர் கைது..!

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெலம்புய, வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கடந்த 18...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் மூவர் கைது..!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், குற்றத்திற்கு முந்தைய...

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கந்த பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – தடுப்புக் காவலில் சந்தேகநபர்கள்..!

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியையும் மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மித்தெனிய முக்கொலை – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (22/02/2025) அனுமதி வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகநபர்களை...

நீதிமன்ற துப்பாக்கிச்சூடு குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த உளவுத்துறை..!

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதை தடுக்க தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை..!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img