திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கந்த பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here