Monday, November 9, 2026
No menu items!

கொழும்பு

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரருக்கு எதிரான வழக்கு..!

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  A.H.M.பௌஸிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) தீர்மானித்துள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவணைக்குப்  பயன்படுத்தியதன் மூலம்...

கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

கொழும்பு நீதவான் நீதிமன்றம், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று குறித்த வழக்கு தொடர்பான விராசணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் போது, ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க...

வேலைக்கு சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது யுவதிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரிய...

நாட்டில் சில வீதிகள் மூடல் !

நாட்டின் சில பகுதிகளில் இன்று  (24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகைதரவுள்ள  நிலையிலேயே, இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளன. அத்துடன், மத்தல, தனமல்வில,வெல்லவாய மற்றும் உமாஓயா வீதிகள்  இன்று முற்பகல் 9.45 முதல்...

விடுதியொன்றில் சிக்கிய பெண்கள்..!

கொழும்பு -  பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும்3 ஆண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இராணுவப்...

தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகிய மர ஆலை..!

கொழும்பு - பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன்  தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின்கசிவு...

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை…!

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையாக ‘உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுள்ளார். இந்த  வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின்...

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு..!

கம்பளை நகரத்தின் அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனின் பெற்றோர் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் விடுமுறைக்காக கம்பளை பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது இந்த சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில்...

கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர்!

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான கொஸ்டா டெலிசியோசா(Costa Deliziosa) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் ஊடாக பிரித்தானியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று(15)வருகை தந்துள்ளனர். அவர்கள் காலி மற்றும்...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு..!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை  மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்thullaர். மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது பணத்தாளில் மாற்றம் இருந்தால்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img