Monday, April 20, 2026
No menu items!

க.கனகேஸ்வரன்

மன்னார் மாவட்டத்திற்கு மேலதிக அரச அதிபர்கள் நியமிப்பு!

மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர்கள்  பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த இருவரும் இன்றைய தினம் புதன்கிழமை (30) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய  மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக...

மன்னாரில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..!

மன்னாரில்  வறுமைக் கோட்டிற்கு   உள்ளான பெண் தலைமைத் துவத்தை கொண்ட கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு நேற்றையதினம்(18) வெள்ளிக்கிழமை (18) வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் நாட்டில்   வசித்து வரும் ஒரு குடும்பத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு...

இராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட வாய்ப்பு..!

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22/04/2025) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

அருவி ஆறு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு..!

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று செவ்வாய்க்கிழமை (8/4/2025) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை...

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 3349 ஏக்கர் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு அனுமதி..!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (8/4/2025) மதியம் மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்,வதிவிட முகாமையாளர், விவசாய விரிவாக்கல் பணிப்பாளர், கட்டுக்கரை...

மன்னார் மாவட்டத்தில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று (20.03.2025) வியாழக்கிழமை மாலை 4.14 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற...

பெண் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு..!

'நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (12/03/2025) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக...

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு தேவைகள் குறித்து ஆய்வு..!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19/02/2025) காலை  திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில்  இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச தனியார்...

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை – நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இரு வரை 48 ஆயிரத்து 295 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்  2049 நபர்கள் 22 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். தற்போது குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img