Wednesday, June 24, 2026
No menu items!

சம்பள அதிகரிப்பு

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியான தகவல்!

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பள அதிகரிப்பை எத்தனை ரூபாவால் மேற்கொள்வது என்பது தொடர்பில் தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது; ரஞ்சித் மத்தும பண்டார!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அரச உத்தியோகத்தர்களே பெரும் பங்களிப்பை வழங்கினர். ஆனால் அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளது. இதனால் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மீளாய்வு!

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்தனர். இந் நிலையில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பில் அதனை மீளாய்வு செய்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்...

விஞ்ஞாபனத்தில் இருந்து பரிந்துரைகளை நீக்கவேண்டும்: ரணிலின் பிரச்சாரம்…!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் ஜே.வி.பி கட்சிகளுக்குத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நேற்று(03.09) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்...

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து…!

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img