2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்தனர்.

இந் நிலையில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பில் அதனை மீளாய்வு செய்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, வாழ்க்கைக்கான நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here