Wednesday, June 10, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 375,000 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர் சேத மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார். வெள்ளத்தினால் நாசமடைந்த ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 141, 268 குடும்பங்களைச் சேர்ந்த 475, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 101 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 2, 591 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 9, 934 குடும்பங்களைச் சேர்ந்த 32, 361 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள்...

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை...

குறைவடைந்த மழைவீழ்ச்சி – முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்..!

வவுனியாவில் மழைவீழ்ச்சி குறைந்தமையால் தாழ்நிலப்பகுதிகளிலிருந்து வெள்ளநீர் வடிந்தோடிவருவதுடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வவுனியாவில் கடந்த இருதினங்களாக மழை பெய்துவந்தது, இதனால் பல்வேறு பகுதிகளிலும் இடர்நிலமை ஏற்றப்பட்டுள்ளதுடன் பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் வெள்ளம் தேங்கிய பகுதிகளிலிருந்து...

நெடுந்தீவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மூவர் விமானம் மூலம் யாழ்வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து நெடுந்தீவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான வழமையான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை விமானப்படை நோயாளர்களை நெடுந்தீவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன்படி 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்...

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விற்பனையில் வீழ்ச்சி!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கம் கூறுகிறது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின்...

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய மன்னாரில் கூடிய விசேட ஒருங்கிணைப்புக் குழு..!

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை (28.11.2024) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டமானது  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில்...

இரத்தினபுரி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு; நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img