முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway crossing) ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரயில் குறித்த வாகனத்தின் மீது மோதியுள்ளது.

விபத்து சம்பவித்த வேளையில் அந்த முச்சக்கர வண்டிக்குள் இருவர் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அவர்களை ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here