Thursday, November 12, 2026
No menu items!

ஜனாதிபதி

ஜனாதிபதி தொடர்பில் வெளியான போலிச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதுகாப்பு அமைச்சு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான பொய்யான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. எந்தவொரு விமானமும் பயன்படுத்தப்படவில்லை எனவும், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் மாத்திரமே பயணித்ததாகவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

நாளை நடைபெறவுள்ள  77வது சுதந்திர தின கொண்டாட்டம்!

"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்...

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – ஜனாதிபதி முன்னிலையில் கஜேந்திரகுமார் எம்.பி!

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பென்னம்பலம் ஜனாதிபதி அனுர முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் யாழ். மாவட்ட...

நாட்டை பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது – சந்திரசேகர்..!

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும்.  அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31/1/2025)...

எம்.பி.யின் சம்பளத்தை கட்சி நிதியில் போட்டு அதில் இருந்து நன்கொடை வாங்குகிறோம்-தேவானந்த சுரவீர..!

தேசிய மக்கள் படையின் தலைவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சம்பளத்தை கட்சியின் நிதிக்கு அனுப்புவதாகவும் அதன் பின்னரே கட்சியின் நிதியில் இருந்து தமது செலவுகளை ஈடுகட்டுவதாகவும் ஜஜபா நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். கேள்வி - நீங்கள் பாராளுமன்றத்தில் சம்பளம் பெறுகிறீர்கள். நீங்கள் அதை வாங்குகிறீர்களா? “நாங்கள் சம்பளத்தை பாராளுமன்றத்தில் இருந்து...

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க அனுமதி..!

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்...

வடக்கில் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு!

வடமாகாணத்தில் நிலவும் சர்ச்சைகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரியவர்களிடம் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (31) உரையாற்றிய அவர், யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்காக மீளப்...

வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் !

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, தொழில்...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி நேரில் அஞ்சலி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.    

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img