இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.








