Tuesday, November 17, 2026
No menu items!

டி-56 ரக துப்பாக்கி

கடற்கரையில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு..!

ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை பகுதியிலிருந்து போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டமை தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இன்று முற்பகல் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இந்தநிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமையும், நேற்றிரவு வேளையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்மீது டி-56 ரக துப்பாக்கியில் சுமார் 10 தடவைகள்...

சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு..!

ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் பயணித்த இருவர் டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த வீட்டை அண்மித்த இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஜா-எல காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img