Saturday, June 13, 2026
No menu items!

தகராறு

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை வெட்டிய நபர் – பொலிஸார் விசாரணை!

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 வயதுடைய நபரின் விரலே வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 20 ஆம் திகதி அன்றே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட...

கொலையில் முடிந்த தகராறு..!

பதுளை, அம்பகஸ்தோவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20/02/2025) இடம்பெற்றுள்ளது. கொடகும்புர, கந்தே எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அம்பகஸ்தோவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள...

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – எட்டுப் பேர் வைத்தியசாலையில்..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24/1/2025) செம்மண்ணோடைப் பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில்,...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

அம்பலாந்தோட்டை கடவர பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

தகாத உறவு – கொலையில் முடிந்த சம்பவம்..!

மாத்தறை, கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சேகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்புறுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) காலை இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மாத்தறை, ரன்சேகொட  பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் பெண் உரிமையாளர் நபரொருவருடன்...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; வெளியான திடுக்கிடும் தகவல்!

ஜனவரி 11ஆம் திகதி தவுலகல பிரதேசத்தில் 19 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் அவரது தந்தையின் சகோதரியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான திருமணத்திற்கு இரு குடும்பங்களும் முன்னர் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் சிறுமியின் தந்தை தனது ஒப்புதலை திரும்பப்...

பேரனின் மனைவியால் 78 வயது மூதாட்டி கொலை!

அத்கல, உலப்பனே பகுதியில்78 வயதுடைய மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலைச் சம்பவம் நேற்றையதினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண் தனது பேரன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக பேரனின் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img