Sunday, November 8, 2026
No menu items!

நா.வேதநாயகன்

நிவாரணங்கள் தொடர்ந்தும் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு – ஆளுநர்..!

வாழ்வாதார மேம்பாட்டுக்காகத்தான் உதவிகள் - நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கிடைக்கின்ற உதவிகள் - நிவாரணங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நிலைபேறாணதாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு...

ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாக ஆளுநர் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய நிலையம் புதன்கிழமை...

பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் தேவை – ஆளுநர் தெரிவிப்பு..!

இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் என்னவோ இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றது. ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு இவ்வாறான கல்விக்கூடங்கள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா...

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம் அமைக்கவேண்டும் – வேதநாயகன்..

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மழலைகள் பூங்காவின் 'மலரும் மழலைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு...

வட மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநர் ஜு யான்வேய்யுடன் சந்திப்பு..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை காலை (10.02.2025) இடம்பெற்றது. வடக்கிலுள்ள மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாக சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். அத்துடன் தமது உதவிகள் வழங்கல்களில்...

வெள்ளை ஈ தாக்கம் தொடர்பில் ஆளுநரின் முக்கிய அறிவித்தல்..!

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை...

தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையை விரிவாக்க திட்டம்..!

குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கிவரும் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவைகள் இன்னும் விரிவாக்கப்பட்டு தொடரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவை நிலையம் இல. 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (11.02.2025) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், போருக்கு...

வடக்கு மாகாண வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மீளாய்வு..!

2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்துக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.02.2025) இடம்பெற்றது. ஒவ்வொரு அமைச்சுக்கள் அதன் கீழான திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள நிதி விவரங்கள் மற்றும் அந்த நிதியில்...

யாழ். போதனாவின் ஆளணியை அதிகரித்து தர ஆளுநரிடம் கோரிக்கை..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவமனைப் பணிப்பாளரது அறையில் நேற்று புதன்கிழமை (05.02.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதன் அவசியத்தை போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். அத்துடன் ஆளணி...

வட மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார். ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img