Friday, August 7, 2026
No menu items!

நிலஅதிர்வு

கிரேக்கத்தில் நில அதிர்வு..!

கிரேக்கத்தில் 6.1 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நில மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், குறித்த நிலஅதிர்வால் எந்தவிதமான சொத்துச் சேதங்களோ, உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

அவுஸ்திரேலியாவில் நிலஅதிர்வு..!

அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு!

ஆப்கானிஸ்தானில் இன்று (16) நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வானது இன்று அதிகாலை 4.43க்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   <!-- -->

பப்புவா நியூ கினியாவில் நிலஅதிர்வு..!

பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் பகுதியில் இன்று நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வானது 5.95 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், நிலஅதிர்வின் காரணமாக ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மியன்மாரில் மீண்டும் நிலஅதிர்வு..!

மியன்மாரில் நெற்று (11/04/2025) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை 4.1 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது . உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்திலாந்திக் பெருங்கடலில் நிலஅதிர்வு!

அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட...
- Advertisement -spot_img