நெடுஞ்சாலை
உள்நாட்டுச்செய்திகள்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றும் பாரவுவூர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து...
புதிய செய்திகள்
தெற்கு மாகாணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய புதிய மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்!
தெற்கு மாகாணத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மூத்த பிரதி காவல் ஆய்வாளர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கை மிக முக்கியமானதாகக்...
புதிய செய்திகள்
பலுகஸ்வெவ பகுதியில் பாரவூர்த்தியுடன் மோதி யானை விபத்து!
பலுகஸ்வெவ பகுதியில் இன்று (07) அதிகாலை நெடுஞ்சாலையில் பயணித்த யானை ஒன்று பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான யானையின் தந்தங்கள் உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்ற நிலையில், கணேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கால்நடை திணைக்களத்திற்கு அறிவித்து பாரவூர்த்தியை வனவிலங்கு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமேதா என்ற யானையே காயமடைந்துள்ளதாக...
புதிய செய்திகள்
வீதி அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது ; ஜனாதிபதி!
கிராமிய பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வீதி அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
இந்த திட்டங்களுக்கான கொள்முதல் செயல்முறையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
ஒப்பந்தங்கள் ஒரு சிலரின் கைகளில் குவிவதை விட உள்ளூர் சமூகங்கள் பயனடைவதை உறுதிசெய்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான...
புதிய செய்திகள்
துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பணி முடிக்க திட்டம்!
துறைமுக அணுகல் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் அறிவித்துள்ளது.
ஏறக்குறைய 90% கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2019 செப்டம்பரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது மொத்த செலவில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5.3 கிலோமீற்றர்...
புதிய செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவு;பந்துல குணவர்தன!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டதன் மூலம் நாடு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது" என்று குணவர்தன குறிப்பிட்டார்.
தேசத்தை வழிநடத்தும் விக்கிரமசிங்கவின் திறமையில்...
புதிய செய்திகள்
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட புகையிரத வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18.07) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகள்
கொம்பனி வீதி மேம்பாலத்தை திறந்து வைத்த ஜனாதிபதி!
கொம்பனி வீதி மற்றும் நீதியரசர் அக்பர் மாவத்தையை இணைக்கும் மேம்பாலத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மேலும் முழு திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ....
News
உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட விபத்தா…!
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


