நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவுமின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை)பாகிஸ்தான் செல்வார்கள் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“எனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்கிறார்கள், அவர்கள் பேச்சுவார்த்தைகளுக்காக நாளை மாலை அங்கு இருப்பார்கள்,” என்று அவர் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் அருகில் உள்ள நகரமான ராவல்பிண்டியிலும் வீதிகள் மூடப்பட்டதாகவும், போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இதேநேரம் இறுதியாக அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற மேரியட் மற்றும் செரீனா உள்ளிட்ட இஸ்லாமாபாத்தின் மிகவும் பாதுகாப்பான ஹோட்டல்களுக்கு அருகில் ஆயுதமேந்திய காவலர்கள் இருக்கும் புகைப்படங்களை ஏஎஃப்பி செய்தியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

செரீனா ஹோட்டலுக்குச் செல்லும் பெரும்பாலான வீதிகள் இன்று மூடப்பட்டிருந்ததோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here