பிரதேசவாசிகள்
உள்நாட்டுச்செய்திகள்
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் – விசாரணைகள் தீவிரம்..!
கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை மைல்வாகனம் நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று (7/3/2025) மீட்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம் வீசுவதை அறிந்து நேற்று காலை 09.00 மணியளவில் அயலவர்களால் குறித்த கிணறு அவதானிக்கப்பட்டது.
குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக காணப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் இது...
புதிய செய்திகள்
ஹட்டன் பகுதியில் லைன் வீட்டில் தீ விபத்து!
ஹட்டன், ஷானன் வட்டா பகுதியில் உள்ள ஒரு லைன் வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் டிக் ஓயா மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ 24 லைன் வீடுகளுக்கு பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், காவல்துறையினர், ஹட்டன்...
புதிய செய்திகள்
வீடொன்றில் தீ விபத்து; ஒருவர் பலி!
கொஸ்லந்தை பூனாகலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களு ஐயா என அழைக்கப்படும் 73 வயதுடைய சைமன் சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சில காலத்திற்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்தவிற்கு வந்து வியாபாரம் செய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார்...
உள்நாட்டுச்செய்திகள்
கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்கள்…!
ஜா - எல தண்டுகம பிரதேசத்தில் உள்ள கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு கால்வாய்களில் வீசப்படுகின்றது.
மேல், வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் உள்ள பல்வேறு கால்நடைப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் இந்த வைரஸ்...
புதிய செய்திகள்
வீதியில் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்கமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் !!!
களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட முயற்சித்தாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தருடன் பெண் சண்டையிட்டுள்ளார்.
இச் சம்பவத்தை...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


