கொஸ்லந்தை பூனாகலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களு ஐயா என அழைக்கப்படும் 73 வயதுடைய சைமன் சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சில காலத்திற்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்தவிற்கு வந்து வியாபாரம் செய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here