Thursday, August 6, 2026
No menu items!

புதுக்குடியிருப்பு

விசுவமடு பகுதியில் பெண் தொழில் முயற்சியாளரின் தும்புத்தொழிற்ச்சாலையில் தீ விபத்து!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு வள்ளூவர்புரம் பகுதியிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர் ஒருவரின் தும்புத்தொழிற்ச்சாலையில் நேற்றைய தினம் மதியம் தீ பரவியது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பத்து இலட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்ச்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார். இதன் போது...

புதுக்குடியிருப்பில் சந்தேக நபர்கள் அதிரடியாக கைது…!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து யுக்திய சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் குறித்த சுற்றிவளைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவரும், காவல்துறையினரால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும், 43 லீற்றர்...

முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி : கணவன் கைது..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15  வயதையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 வயதுடைய் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார. குறித்த சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் ...

அரச பேருந்தில் 45 லிட்டர் கசிப்பு கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் 45 லிட்டர் கசிப்பினை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் பேருந்ததை மறித்து பொலிஸார் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது 45 லிட்டர் கசிப்பினை  சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில்...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்..!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது நேற்றைய தினம்(25) கார் ஒன்றில் வந்த நால்வர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுபோதையில் காரில் வந்த நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை தடுக்க...

பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த  தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு - இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும்  இந்நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில்...

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி..!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தை சேர்ந்த  18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தூக்கில் தொங்கிய...

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக உடையார் கட்டு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள...

வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டு கும்பல் கைது

கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  இளைஞன் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்று  வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் ஹயஸ் ரக வாகனத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாண வீதியில் தப்பியோடி மல்லாகம் பகுதியில்  பொதுமக்கள் மீது வாள்களை காட்டி அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img