முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் 45 லிட்டர் கசிப்பினை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் பேருந்ததை மறித்து பொலிஸார் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது 45 லிட்டர் கசிப்பினை  சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் பொதி செய்து எடுத்துச்  சென்றமை உறுதி செய்யப்பட்டதோடு குறித்த இரு நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை குறித்த பொதி விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லவிருந்ததாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here