Monday, June 15, 2026
No menu items!

புதுக்குடியிருப்பு

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஓன்று   திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் நேற்றைய தினம் (07)ஆம் திகதி  விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த 05ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட திடீர்...

முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை...

முல்லைத்தீவில் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் விபத்து; ஒருவர் பலி!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும்...

மர்மமான முறையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு..!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று வியாழக்கிழமை (22.05.2025) மாலை புதர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு...

புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் நேற்று வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, மந்துவில் 8ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நடவடிக்கை!

வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்...

ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகம் புதுக்குடியிருப்பில் திறப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சத்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது ஐனாதிபதி தேர்தல் அலுவலகம் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முத்துச்சாமி லக்சிகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுனமன்ற உறுப்பினர்...

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு…

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனத்தில் சூட்சுமான முறையில் வாகனத்தின் அடிப்பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதி மிக்க  32   பாலை மர குற்றிகளை பொலிஸார்...

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானை உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதியில் கள்ளியடி வயல் வெளிப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இனம் காணப்பட்டுள்ளது. சுமார் 15 தொடக்கம் 20 ற்கும் இடைப்பட்ட வயதுடைய யானையே இவ்வாறு உயிரிழந்து காணப்படுகின்றது. யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்றவனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புதுக்குடியிருப்பு...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img