Wednesday, July 22, 2026
No menu items!

புத்தளம்

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன்...

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்...

விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். 1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556...

நாட்டில் தொடரும் கன மழை..!

தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள்...

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன - வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து...

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் - ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலக...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img