Sunday, June 14, 2026
No menu items!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை-பாட்டலி சம்பிக்க ரணவக்க..!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சார...

குறைக்கப்பட்டுள்ள மின்கட்டணம்!

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மின்சாரக் கட்டணத்தில் மாற்றமா?

மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் என மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கையின்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதல் கடந்த 10ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் யோசனை...

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை...

உத்தேச மின் கட்டணம் – பொதுமக்களின் கருத்துக் கோரல் வட மாகாணத்தில் தீவிரம்..!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் வட மாகாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தேச மின்சார கட்டணம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்..!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய மின் கட்டணத் திருத்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வறிக்கை எதிர்வரும்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர்..!

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14.08) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.  ஜனக ரத்நாயக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டண திருத்தம் – கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் இதுவரை முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது. குறித்த முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியளவில் இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க இருந்தது. இந்த நிலையில், இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மின் கட்டண...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img