மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் இதுவரை முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது.

குறித்த முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியளவில் இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழியுமாறு மூன்று சந்தர்ப்பங்களில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையால் அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை அதிக இலாபங்களை ஈட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலாபம் பெற்ற நிலையில், மின் கட்டண திருத்த முன்மொழிய இலங்கை மின்சார சபைக்கு விருப்பம் இல்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நிலையில், மின் கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், தற்போது இருக்கும் கட்டணத்தையே தொடர்ந்தும் தக்க வைக்க அல்லது சிறிய தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here