Saturday, November 7, 2026
No menu items!

மட்டக்களப்பு

பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை..!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று (1/21/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு...

நெல் அறுவடை தொடர்பில் சர்ச்சை – விவசாயிகள் கண்டனம்..!

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர். இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதை தடை...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல வீதிகள் – சிரமத்தில் மக்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (1/19/2025) கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு நவகரி பிரதேசத்தில் 92 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு  நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (1/18/2025) காலை 10.00 மணிக்கு அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரையடைந்த நிலையில் இருப்பதை...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை  – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்..!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பியோடியதோடு 14 பரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்...

வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத்...

அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி; சாணக்கியன்!

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பொங்கல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.    

குரங்குகளின் தொல்லை தாங்காமல் புலம்பும் மக்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லைககள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியிலும் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும், மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல்லாண்டுப் பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள்...

பெற்றோரின் கவனயீனம் – ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட கதி..!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் நேற்று சனிக்கிழமை (04.01.2025) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை நேற்று காலையில் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை...

வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியானது..!

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளப் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024)  வெளியிட்டு வைத்தது. மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில்  இன்று செவ்வாய்கிழமை (31.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் சம்பள பட்டியலை...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img