மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் தப்பியோடியதோடு 14 பரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.டி.பி. சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வயல் பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் பொலிஸாரை கண்டு தப்பிஓடிய நிலையில் அங்கி கசிப்பு தயாரிப்பதற்காக 14 பரல்களில் தயாராக இருந்த கோடாக்களை மீட்டு அதனை அங்கு உடைத்து ஊற்றி அழித்ததுடன் பெரல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]







