Sunday, November 8, 2026
No menu items!

மட்டக்களப்பு

பெற்றோல் பவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பெற்றோல் பவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன் நேற்று (05) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் தேவாபுரம் பகுதியில் வேலை முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் சித்தாண்டியை சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை(06.02.2025) பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடை 4 பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று ( 06/02/2025 ) அதிகாலை மீன் பிடிப்பதற்காக...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்..!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கற்சேனை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் (06/02/2025) வியாழக்கிழமை அவதானித்து பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை  பார்வையிட்டனர். இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள...

மட்டக்களப்பு விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு..!

மட்டக்களப்பு களுதாவளையில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்குத் திறந்து விடாமல் காணப்பட்ட இந்த விசேடபொருளாதார மத்தியநிலையம் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை (01.02.2025) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ சபை தலைவர் முகாமைத்துவ சபை...

பறவைகள் சரணாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான வலசைப் பறவைகள்..!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில்  வலசைப் பறவைகள்  வருகைதந்துள்ளன. அதில்  Australian White Ibis என்ற  பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பறவையினம் வருடத்தில் டிசம்பர்  ஜனவரி, மாதங்களில் இச்சரணாலயத்திற்கு  இனப்பெருக்கத்திற்காக வருவதாகவும் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச்...

சிறுவர் இல்லங்களில் இணைக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள் தாய் தந்தையர்கள் இருந்தும்; கல்வி நோக்கத்திற்காக பிள்ளைகளை பிரித்து சிறுவர் இல்லங்களில் இணைக்கப்படும் நிலை மாற்றப்படவேண்டும் எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்படவேண்டுமே தவிர முதல் தெரிவாக இருக்க கூடாது என கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி றிவானி...

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு!

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நெல் அறுவடை இடம்பெறுகின்ற நிலையில், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கே எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய...

தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அத்துடன்  ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற...

இன்றைய நாளுக்கான வானிலை!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img