Sunday, November 8, 2026
No menu items!

மட்டக்களப்பு

வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெள்ளிக்கிழமை (14.03.2025) அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது...

காட்டுபகுதியில் வீசிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்..!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக இன்று சனிக்கிழமை (3/15/2025) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3...

வீதியினை கடக்க முற்பட்ட இளைஞன் வான் மோதியதில் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/03/2025) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வான் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்...

மட்டுவில் 11 சபைகளுக்காக கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரசபை உட்பட 11 உள்ளுராட்சி மன்றங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எனவே கோடரி, காம்புகளுக்கு தொடர்ந்து வாக்குளை அளிக்காமல் சரியான ஒரு நேர்மையான ஒரு தலைமைத்துவத்துக்கு கீழே மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கின்ற எமது கட்சியில் போட்டியிடுகின்றவர்களுக்கு வாக்குகளை அளிக்க அனைத்து மக்களும் முன்வரவேண்டும் என...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் இன்று (3/13/2025) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அவருக்கு பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி...

வீடொன்றின் காணியில் இருந்து மோட்டார் குண்டு மீட்பு..!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில் நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (12.03.2025) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள முதலியார் நீதிமன்ற வீதியிலுள்ள வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவரின் காணி ஒன்றினை பராமரித்துவரும் ஒருவர் சம்பவதினமான நேற்று துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார்...

விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்; எஸ்.ஸ்ரீநேசன்!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்மித்து கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமானப்படையினரின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09.03.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல்,...

மட்டக்களப்பில் பொலிஸ் பதிவு நடவடிக்கை ஆரம்பம்..!

மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடு வீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை (08/03/2025) ஆரம்பித்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றியுள்ளது. 1865 ம் ஆண்டு 16 ம் இலக்க  பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான...

மட்டு. பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை – மூன்று பெண்கள் கைது..!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு பெண்  முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07/03/2025) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img