Sunday, November 8, 2026
No menu items!

மாணவர்கள்

கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ள அதிகளவான மாணவர்கள்..!

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீதமான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான வகுப்புகளில் கல்வி கற்கும் 3,843...

‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி ஆரம்பம்..!

இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (13/03/2025) மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி...

உணவு ஒவ்வாமை காரணமாக 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 31 மாணவர்களுக்கு நோய்...

நாட்டில் கடும் வெப்பமான வானிலை – மாணவர்களுக்கு அறிவுறுத்தல்..!

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும், விளையாட்டு பயிற்சிகளை நடத்தும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும்...

செவிப்புலனற்ற சைகை மொழி ஆற்றல் கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு விசேட திட்டம்..!

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல் நேற்று இடம்பெற்றது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாஸ்டர் ஒப் எடியுகேசன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விசேட கல்வி தேவை பற்றிய முன்வைப்புக்களை மேற்கொண்டனர். இதன் போது, குறித்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் சைகை மொழி ஆற்றல் கொண்ட உறுப்பினர்களின்...

தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்!

கடுவெல தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை பொலிஸ் காவலில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எனக் கூறப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும்,...

பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து; 17 மாணவர்கள்  உயிரிழப்பு!

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை முன்றலிலிருந்து  ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அம்பன் கிழக்கு வரை சென்று நிறைவடைந்துள்ளது. பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலமையில் ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை...

வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img