கடுவெல தேசிய பாடசாலையொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை பொலிஸ் காவலில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் எனக் கூறப்படும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும், சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் நவகமுவ பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் கேடட் பயிற்சியின் போது வெளியில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள் இருவர் மற்றும் பாடசாலையின் மற்றுமொரு குழுவினர் இணைந்து இந்த மோதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








