Friday, May 1, 2026
No menu items!

மினுவாங்கொடை

பந்தைப் பிடிக்க முயன்றபோது வீரர்கள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மினுவாங்கொடை அலுத்தேபொல பொது மைதானத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது. உயரமான பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், அவர் மினுவாங்கொடை...

71 வயது மூதாட்டி மீது பாலியல் வன்முறை – மிளகாய்த் தூள் தூவி கொலை.!!

மினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தில் 71 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் தூவி, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டில் வசிக்கும்...

மாத்தளை–அலவ்வில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது!

மாத்தளை, அலவ்வ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறி, பௌத்த துறவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், 38 வயது பௌத்த துறவி, அலவ்வ பகுதியின் விகாரை ஒன்றைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, அவரிடம் 10 கிராம் ஹெரோயின் இருந்தது. அதே நேரத்தில், மற்ற...

மூதூரில் பேருந்து லொரியுடன் மோதியதில் 33 பேர் காயம்..!

திருகோணமலை மூதூரில் பேருந்து பாரவூர்தியுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மினுவாங்கொடையிலிருந்து சேருவிலவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே  மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை - பத்தடுவன...

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இருவர் கைது..!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாகொடமுல்ல மற்றும் கலபிடமட ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 27 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவார். மினுவாங்கொடை, கல்லொலுவ பிரதேசத்திற்கு...

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு;ஒருவர் பலி!

மினுவாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்களுடன் இருவர் கைது…!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன்  இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களைச்...

01கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களுடன் மூன்று பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது  கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள், சிகரெட்டுகள், Apple Smart கைப்பேசிகள், தொலைபேசி உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களுடன் குறித்த மூவரும்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி

குருணாகல் பிரதேசத்தில் தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img