மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லொலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாகொடமுல்ல மற்றும் கலபிடமட ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 27 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவார்.

மினுவாங்கொடை, கல்லொலுவ பிரதேசத்திற்கு கடந்த 07 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், வீதியிலிருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் ஆஜராகியுள்ள நிலையில், மற்றைய சந்தேக நபர் அத்தனகல்ல,  ஊரபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here