Friday, June 5, 2026
No menu items!

முதலை

மீன்பிடியில் ஈடுபட்டவரை இழுத்துச் சென்ற முதலை..!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை (20/05/2025) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது. முதலை இழுத்துச்...

குடிமனைக்குள் புகுந்து கோழிகளை வேட்டையாடிய முதலையை பொதுமக்கள் மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிள்ளையாரடி நாகையா வீதியிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு வேளைகளில்  முதலை ஒன்று உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது. இந்த...

முதலை தாக்கி பாடசாலை மாணவன் படுகாயம்..!

மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் முதலை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளது. 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த பாடசாலை மாணவன் நேற்றைய தினம் மாலை மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த முதலை ஒன்று மாணவனை தாக்கி நீரினுள் இழுத்துச்...

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை…!

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29.12.2024) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29.12.2024) மாலை கரைக்கு வந்தது.  இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர்.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் மீட்பு..!

அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் கடந்த 28ஆம் திகதி முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்தவர் ஆவார். எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்ற நபரை முதலை இழுத்துச் சென்றது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக கடந்த வாரம் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும்...

முதலையால் இழுத்து செல்லப்பட்ட நபர்..!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (28.11.2024) இடம்பெற்றுள்ளது. முதலை பாறை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து எருமை மாடுகளை மறுபுறம் விரட்டிச் சென்ற நபரை, முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரிச்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய...

முதலை தாக்கியதில் ஒருவர் பலி…!

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொரா ஓயாவை கடக்க சென்ற நபரை முதலை ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பதவி ஸ்ரீபுர, கமுனுபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய அறிஞர் ஆவார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img